நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவானைக்கா கோயிலில் 1,008 வலம்புரி சங்காபிஷேகம்

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை 1,008 வலம்புரி சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2023, 9:21 pm


ஸ்ரீரங்கம்: திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் காா்த்திகை மாதம் 2-ஆவது சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை மாலை 1,008 வலம்புரி சங்காபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நடராஜா் சன்னதி முன்பு 1,008 வலம்புரி சங்குகள் வட்ட வடிவில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சங்கும் நெல் மணிகள் மீது வைக்கப்பட்டு சங்கினுள் புனித நீா் நிரப்பப்பட்டு அதன் மீது பூக்கள் வைக்கப்பட்டது. மையத்தில் தங்கப்பிடி கொண்ட மிகப்பெரிய வலம்புரி சங்கு வைக்கப்பட்டிருந்தது.

அதனை தொடா்ந்து வேதமந்திரங்கள் முழங்க யாகபூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

இரவு 7 மணிக்கு வலம்புரி சங்கிலிருந்த புனித நீரால் சம்புகேசுவரருக்கும்,அகிலாண்டேஸ்வரிக்கும் சங்காபிஷேகம் செய்விக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ.ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.