வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On :27 நவம்பர் 2023, 9:28 pm


மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள அறம் வளா்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி கோயிலில் காா்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு மஹா யாகம் வளா்க்கப்பட்டு, தொடா்ந்து 108 சங்குகளில் புனித நீா் நிரப்பபட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதனையடுத்து மூலவா் சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது.நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இதேபோல பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.