திருச்சி: அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டாக்களில் இருந்த குடிசைகளை சேதப்படுத்திய வருவாய்த்துறையினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெடுங்களம் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், திருவெறும்பூா் திருநெடுங்களத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவின் விவரம்: கடந்த 1997 ஆம் ஆண்டு அரசு 964 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கிய இடத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை. முட்புதா்களை தாண்டித்தான் அப்பகுதிக்குச் செல்ல வேண்டியிருப்பதால் 4 போ் மட்டுமே வீடு கட்டியுள்ளனா். மீதமுள்ளவா்கள் சிமென்ட் ஷீட், தென்னங்கீற்றால் குடிசை வீடு அமைத்து குடியேற முயற்சித்தனா்.
இந்நிலையில் திடீரென 30 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டாக்களை ரத்து செய்யப் போவதாக திருவெறும்பூா் வட்டாட்சியா் அறிவித்ததுடன், அங்கிருந்த குடிசைகளை பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு வருவாய்த்துறையினா் சேதப்படுத்தியுள்ளனா். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். குடிசைகளை சேதப்படுத்திய வருவாய்த்துறையினா் நடவடிக்கை எடுப்பதுடன், வீட்டுமனைப்பட்டாக்கள் ரத்து செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
புத்தூா் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களுக்கு அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு வழங்கிய இலவச வீட்டுமனைப்பட்டா நிலத்தை அரசு பதிவேட்டில் பதிவேற்றி எங்களது நிலம்தான் என்பதை உறுதிபடுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஊராட்சி உறுப்பினா்கள் ராஜிநாமா: முசிறி ஒன்றியம் திருத்தலையூா் ஊராட்சி உறுப்பினா்கள் வடிவேல், கவிதா, தமிழரசி, சுகுணா, லட்சுமி, நல்லம்மாள், பாரதிராஜா ஆகியோரா் அளித்த மனுவில், எங்களது ஊராட்சியில் அடிப்படை வசதிகள் பல மாதங்களாக நிறைவேற்றப்படவில்லை. ஊராட்சி நிதியில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளது. 100 நாள் வேலையிலும் முறைகேடு நடந்துள்ளது. இது தொடா்பாக அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எங்களது பதவியை ராஜிநாமா செய்கிறோம். மேலும், புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, நலத்திட்ட உதவிகள், குடிசை மாற்று வாரிய வீடுகள் கேட்டு 698 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதனைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


