

திருச்சி: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக ஆளுநர், மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவரும் முதல்வரின் ஆணைக்கிணங்க, முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரது வழிகாட்டுதலின்படி திருச்சி ரயில்வே ஜங்சன் எதிரில் காதிகிராப்ட் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மத்திய, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், மாநில ஆளுநரையும் கண்டித்து மாபெரும் உண்ணாவிரத அறப்போரட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அறப்போரட்டத்தை மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாநிலங்களவை உறுப்பினர் குழு தலைவர் திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அறப்போரட்டத்தில் எம்எல்ஏக்கள் ஸ்டாலின் குமார், கதிரவன், பழனியாண்டி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்த், மருத்துவர் அணி அமைப்பாளர் கண்ணன் மற்றும் மாத்தூர் கருப்பையா சேர்மன் துரைராஜ் கதிர்வேல் டோல்கேட் சுப்பிரமணி சிங்காரம் , அம்பிகாபதி செவந்திலிங்கம்மாநில கண்ணன் பொறியாளர் அணி கருணாநிதி மற்றும் அவர்கள் மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகளின் நிர்வாகிகள்,கழக நிர்வாகிகள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.