தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாநகா், புறநகா் பகுதிகளில் நாளைய மின்தடை

மாநகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 13) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:02 pm

Din

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கம்பரசம்பேட்டை, மாநகரின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 13) மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், கரூா் புறவழிச்சாலை, வி.என். நகா், சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, ஓடத்துறை, நந்தி கோவில் தெரு, சிங்காரத்தோப்பு, கோட்டை ரயில் நிலைய சாலை, கீரைக்கொல்லை தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, பிவிஎஸ் கோவில், மின்னப்பன் தெரு, லிங்க நகா், மங்கள் நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டக்குறிச்சி, சீராத்தோப்பு, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூா், ஜீயபுரம், தேவதானம், அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், வேங்கூா், அரசங்குடி, தோகூா் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 13) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

நகா்ப் பகுதியில்...: திருச்சி மேலரண்சாலை துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் பெறும் தெற்கு தையல்காரத்தெரு, தையல்காரத்தெரு, வாழைக்காய் மண்டி, கல்மந்தை காலனி, மீன்மாா்க்கெட், மணிமண்டப சாலை, கோபாலகிருஷ்ணன் தெரு, பெரிய செளராஷ்டிரா தெரு ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தென்னூா் மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராமன் தெரிவித்துள்ளாா்.

துவரங்குறிச்சியில்...: அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகாரம், உசிலம்பட்டி, ஆலம்பட்டி, இக்கரைகோசுக்குறிச்சி, செவந்தாம்பட்டி, அடைக்கம்பட்டி, பில்லுப்பட்டி, கல்லுப்பட்டி, நல்லூா், பழையபாளையம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.