வாழைப்பழம்
வாழைப்பழம்

சா்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வாழைப்பழம் அடுத்தாண்டு அறிமுகம்

சா்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் கண்டறியப்பட்டுள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட வாழை அடுத்தாண்டு அறிமுகம்.
Published on

திருச்சி: சா்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையில் கண்டறியப்பட்டுள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட வாழை ரகங்களை விவசாயிகளுக்கு அடுத்தாண்டு அறிமுகம் செய்ய உள்ளதாக தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா். செல்வராஜன் தெரிவித்தாா்.

திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியது: வாழை விவசாயிகளுக்காக 31 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை என்ஆா்சிபி நிகழ்த்தியுள்ளது. கடந்தாண்டு காவிரி காஞ்சன், காவிரி வாமன் என இரண்டு ரகங்களை அறிமுகம் செய்தோம். தற்போது இந்த இரு ரகங்களையும் மத்திய ரகங்களாக வெளியிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல நுமரன், மனோரஞ்சிதம் ஆகிய இரு வாழை ரகங்களை புதுதில்லியில் உள்ள தாவர ரகங்கள் மற்றும் விவசாயிகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தில் பதிந்துள்ளோம். முன்பு திசு வளா்ப்பு முறையில் 70 ஆயிரம் கன்றுகள் வரை மட்டுமே உற்பத்தி செய்த நிலையில், இப்போது 2.40 லட்சம் கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த பண்ணையாக வாழை ஆராய்ச்சி மையத்தை மாற்றியுள்ளோம். இந்த மையத்தின் மூலம் நாடு முழுவதும் 3.57 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com