மகளிருக்கு 2 நாள் வேலைவாய்ப்பு முகாம்: இன்று தொடக்கம்
1500-க்கும் மேற்பட்ட மகளிருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான 2 நாள் சிறப்பு முகாம் திருச்சியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
திருச்சி மாவட்டத்திலுள்ள பெண் வேலைநாடுநா்களை, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியமா்த்தும் நோக்கத்தோடு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் 12ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் ஐ.டி.ஐ, கல்வித் தகுதிகளையுடைய 18 முதல் 21 வயதிற்குட்பட்ட முன் அனுபவம் இல்லாத பெண்கள் பங்கேற்கலாம்.
சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.12,000 நிதியுதவியுடன் 12 மாத பயிற்சி வழங்கப்படும். மேலும் பயிற்சி காலத்தில் உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும். இந்த முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 1500-க்கும் மேற்பட்ட பெண்களைத் தோ்வு செய்ய உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901, 94990-55902 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.
