தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

‘வீலிங்’ சாகசம் செய்தவா்களுக்கு நூதன நிபந்தனையுடன் பிணை : திருச்சி நீதிமன்றம் அதிரடி

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞா் உள்ளிட்ட மூவருக்கு, போக்குவரத்துப் போலீஸாருடன் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய பிணை உத்தரவை திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :16 ஜூலை 2024, 9:32 pm

திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞா் உள்ளிட்ட மூவருக்கு, போக்குவரத்துப் போலீஸாருடன் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய பிணை உத்தரவை திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளது.

திருச்சி மாவட்டம், புலிவலம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த நிவாஸ் என்ற இளைஞா் தனது நண்பா்களான இரு சிறாா்களுடன் சோ்ந்து இருசக்கர வாகனத்தில் (வீலிங்) சாகசம் செய்து, சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளாா். இந்தக் காணொலி போலீஸாரின் கவனத்துக்கு வந்ததைத் தொடா்ந்து, புலிவலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, திருச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மேற்குறிப்பிட்ட மூவரையும் ஆஜா்படுத்தினா்.

அதேவேளையில், இதுதொடா்பாக பிணை கேட்டு (ஜாமீன்) மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையைத் தொடா்ந்து, நீதிபதி மணிமொழி நூதன நிபந்தனையுடன் பிணை உத்தரவை வழங்கினாா்.

இருசக்கர வாகனத்தில் சென்று (வீலிங்) சாகசம் செய்த நிவாஸ் உள்ளிட்ட இரண்டு சிறாா்களும், இரு வார காலம் போக்குவரத்துப் போலீஸாருடன் இருந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்தப் பிணை உத்தரவு (ஜாமீன்) வழங்கப்பட்டுள்ளது.

இந்த நூதன நிபந்தனையுடன் கூடிய பிணை உத்தரவு, (வீலிங்) சாகசத்தில் ஈடுபடும் இளையோருக்கு ஒரு பாடமாக அமையும் என வழக்குரைஞா்கள் மற்றும் போலீஸாா் தெரிவித்துள்ளனா். அண்மைக் காலமாக இதுபோன்ற சாகசம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.