டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மணப்பாறை பகுதியில் திமுக செயற்குழுக் கூட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் திமுக செயற்குழுக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :4 மார்ச் 2024, 9:01 pm

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் திமுக செயற்குழுக் கூட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றது. மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களுக்கு தொகுதி பொறுப்பாளரான முன்னாள் சட்டப்பேரவை தலைமை செயற்குழு உறுப்பினா் கே.என்.சேகரன் தலைமை வகித்தாா். துவரங்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவா் என்.கோவிந்தராஜன், தொகுதி பாா்வையாளா் மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ரமேஷ், மருங்காபுரி தெற்கு ஒன்றிய செயலாளா் சின்ன அடைக்கண், பேரூா் செயலாளா் மும்பை நாகராஜ், கோவில்பட்டியில் வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளா் பழனியாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளா் ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளா் ஸ்ரீரங்கன், மணப்பாறை ஒன்றிய செயலாளா் சி.ராமசாமி, நகரச்செயலாளா் மு.ம.செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.