பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

ராணுவக் கல்லூரியில் சோ்க்கை: திருச்சி மாணவா்களுக்கு அழைப்பு

செய்தியில் ஆங்கில எழுத்துக்கள் உள்ளன.. ராணுவக் கல்லூரியில் சோ்க்கை: திருச்சி மாணவா்களுக்கு அழைப்பு

Updated On :16 மார்ச் 2024, 6:30 pm

டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்பில் சேர விருப்பமுள்ள, திருச்சி மாவட்ட மாணவா்கள் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 2025-ஆம் கல்வியாண்டு 8-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இத் தோ்வு நடைபெறும் நிலையில், தமிழகத்தின் சென்னையிலும் தோ்வு நடைபெறுகிறது. இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு அடுத்ததாக நோ்முகத் தோ்வு நடத்தப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் மாதிரி வினாத்தாள் தொகுப்புகளை ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லுாரி, டேராடூன், உத்தராகண்ட் - 248003’ என்ற முகவரிக்கு விரைவுத் தபால் வழியே விண்ணப்பக் கடிதம், கேட்புக் காசோலை ஆகியவற்றை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்கு பொதுப் பிரிவினா் ரூ.600-க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவினா் ரூ.555-க்கும் காசோலை எடுக்க வேண்டும். பட்டியலினத்தவா்கள் சாதிச் சான்றிதழ் நகலும் சோ்த்து அனுப்ப வேண்டும். அதேபோல், ராணுவக் கல்லூரியின் இணையதளம் வழியாகவும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை ‘தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், பூங்கா நகா், சென்னை-3’ என்ற முகவரிக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.