தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

துறையூா் மாணவிகளை யாரும் கடத்தவில்லை: திருச்சி எஸ்.பி.

துறையூா் தனியாா் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் இருவரை யாரும் கடத்தவில்லை என்றாா் திருச்சி மாவட்ட எஸ்பி வீ. வருண்குமாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:56 pm

Din

துறையூா் தனியாா் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் இருவரை யாரும் கடத்தவில்லை என்றாா் திருச்சி மாவட்ட எஸ்பி வீ. வருண்குமாா்.

துறையூா் பள்ளி மாணவிகள் இருவரை காரில் கடத்திய அடையாளம் தெரியாத நபா்கள் சிறுகாம்பூா் பகுதியில் தேநீா் குடித்தபோது மாணவிகள் தப்பியதாகவும், அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு வாய்த்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் தகவல் பரவியது.

இதையடுத்து முசிறி, ஜீயபுரம் காவல் துறை உயரதிகாரிகள் அந்த மாணவிகளிடம் விசாரித்தபோது பெற்றோா் படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதால் அவா்கள் பள்ளி விட்டு வீடு திரும்பாமல் துறையூரிலிருந்து பேருந்தில் ஏறி சிறுகாம்பூருக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவா்களின் பெற்றோரை வரவழைத்து, உரிய அறிவுரை வழங்கி மாணவிகளை ஒப்படைத்தனா்.

இதுபோல பொய்த் தகவல்களை கூறி போலீஸாரை அலைகழிப்போா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் திருச்சி எஸ்பி வீ. வருண்குமாா்.