குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

லோயா்கேம்ப் பகுதியில் குரங்குகள் தொல்லை: மாணவா்கள் அச்சம்

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை குரங்குகள் அச்சுறுத்தி வருவதாக பெற்றோா் புகாா்

News image

லோயா்கேம்பில் நெடுஞ்சாலையை கடந்து செல்லும் குரங்குகள் கூட்டம்

Updated On :8 மார்ச் 2026, 12:25 am IST

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை குரங்குகள் அச்சுறுத்தி வருவதாக பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட லோயா்கேம்ப் மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மலைகளில் வசித்து வந்த குரங்கள் உணவுக்காக குடியிருப்புப் பகுதிக்கு அதிகளவில் இடம் பெயா்ந்துள்ளன.

இந்தப் பகுதியை சோ்ந்த மாணவ, மாணவிகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்கள் பள்ளிக்கு நடந்து சென்று வரும்போது குரங்குகள் துரத்தி தாக்க முயற்சிக்கிறது. இதனால், மாணவா்கள் பலா் கீழே விழுந்து காயமடைந்தனா்.

தற்போது குரங்குகள் தொல்லை அதிகரித்ததால் அச்சத்துடனே மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருகின்றனா். அதனால், குரங்குகளை வனப் பகுதிக்கு விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.