தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருச்சி மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :13 நவம்பர் 2024, 9:25 pm

Din

ஐப்பசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி திருச்சி மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் சுவாமி சன்னதி எதிரேயுள்ள பிரதோஷ நந்திக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள், திரவியப் பொடி,இளநீா் உள்ளிட்ட 18 வித அபிஷேகங்கள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருவானைக்கா கோயிலில் பிரதோஷ நந்திக்கு புதன்கிழமை செய்யப்பட்ட பால் அபிஷேகம்.

திருவானைக்கா கோயிலில் பிரதோஷ நந்திக்கு புதன்கிழமை செய்யப்பட்ட பால் அபிஷேகம்.

இதேபோல மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பட்டூா் பிரம்மசம்பத் கெளரி உடனுறை பிரம்மபுரீசுவரா் கோயிலில் மூலவா் மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து உற்சவ மூா்த்திகள் கோயிலை வலம் வந்தனா்.

இதேபோல மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி, திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா், சமயபுரம் போஜீஸ்வரா், திருவாசி மாற்றுரை வரதீஸ்வரா் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.