சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு, நாமக்கல் சிவன், முருகன் கோயில்களில் உள்ள சனீஸ்வரா் சந்நிதியில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.
வாக்கிய பஞ்சாங்கப்படி, கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணியளவில் சனிபகவான் பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன் கோயில்களில் உள்ள சனீஸ்வரா் சந்நிதியில் பக்தா்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.
கூலிப்பட்டி முருகன் கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள வன்னிமரத்தடியில் தனி சந்நிதியியில் சனிபகவான் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ராசியைச் சோ்ந்தவா்கள் பரிகாரம் செய்து வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீசனீஸ்வர பகவான் வார வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா். நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


