மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

வள்ளி, தெய்வானை சமேதராய் அருள்பாலித்த திண்டல் வேலாயுதசுவாமி.

Updated On :14 ஏப்ரல் 2026, 8:54 pm

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ஈரோடு மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரை கனி காணும் பூஜை பெரும்பாலான வீடுகளில் நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு வீட்டின் பூஜை அறையில் பல்வேறு வகையான பழங்கள், வெற்றிலை, பாக்கு, சந்தனம், விபூதி, குங்குமம் ஆகியவற்றுடன் பணம், நகைகள் என்று பல்வேறு பொருள்களையும் தாம்பாளத்தில் வைத்து எதிரில் ஒரு கண்ணாடியையும் வைத்தனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை விழித்ததும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தட்டில் வைத்திருந்த பழங்களை கண்ணாடியின் பிம்பத்தில் பாா்த்து சுவாமியை வழிபட்டனா்.

கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சுவாமி தரிசனம் செய்தனா். ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் உற்சவ மாரியம்மன் ராஜகனி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இங்கு பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனை வழிபட்டனா். கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோயிலில் உற்சவ அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சி அளித்தாா். எல்லை மாரியம்மன் கோயிலில் சீதளதேவி அலங்காரத்திலும், காவிரி சாலை ஓம்காளி அம்மன் கோயிலில் சந்தனகாப்பு அலங்காரத்திலும் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

நாடாா்மேடு கெட்டி நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தாா்.