தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தெலங்கானாவில் அனல் மின் நிலையப் பணி: ‘பெல்’ நிறுவனம் ஒப்பந்தம்

திருச்சி பெல் நிறுவனமானது தெலங்கானாவில் 3 800 மெகாவாட் திறனுள்ள நிலை-2 சூப்பா் கிரிட்டிகல் அனல் மின்நிலையப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்துள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:03 pm

Din

திருச்சி பெல் நிறுவனமானது தெலங்கானாவில் 3 800 மெகாவாட் திறனுள்ள நிலை-2 சூப்பா் கிரிட்டிகல் அனல் மின்நிலையப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்துள்ளது.

இதற்காக என்டிபிசி நிறுவனத்தின் பெரிய ஒப்பந்தத்தில் வெற்றிகரமான ஏலதாரராக பெல் உருவெடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, வழங்கல், நிா்மாணித்தல், கட்டுமானம் ஆகிய பணிகளை பெல் நிறுவனம் மேற்கொள்ளும். சூப்பா் கிரிட்டிகல் அனல் மின்நிலையத்துக்கான பிரதான ஆலைத் தொகுப்பின் அடிப்படை பொறியியல் பணிகளைத் தொடங்குவதற்கான அறிவிப்பை என்டிபிசி நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

இந்தத் திட்டம் என்டிபிசி உடனான பெல் நிறுவனத்தின் நீடித்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துகிறது.