வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின்நிலையம் உள்ளது. இங்கு முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையின் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரம் வீதம் 1200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த அனல் மின்நிலையத்தில் அவ்வப்போது ஏற்படும் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மின்நிலையத்தின் 2-ஆவது நிலையின் 2-ஆவது அலகில் திங்கள்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மின் ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் கோளாறை சரி செய்யும் பணிகள் நிறைவு பெற்று, உடனடியாக மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஆனால், தொடா்ந்து இது போன்ற பழுது ஏற்பட்டு வருவதால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால், இதற்கு நிரந்த தீா்வு எட்டுவதற்கான நடவடிக்கை அரசும், மின்வாரியமும் எடுக்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

800 மெகாவாட் திறன் அனல் மின் நிலையம்... ரூ.1,600 கோடி ஆர்டரால் தெர்மாக்ஸ் பங்குகள் உயர்வு!

தெலங்கானாவில் அனல் மின் திட்டம்: என்டிபிசி - பெல் ரூ.13,500 கோடி ஒப்பந்தம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது

உடன்குடி அனல் மின்நிலையத்தில் ஜூன் மாதத்துக்குள் வணிகரீதியிலான உற்பத்தி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


