ரூ.1,600 கோடி மதிப்பிலான ஆர்டரை தெர்மாக்ஸின் துணை நிறுவனம் கையகப்படுத்தியதை அடுத்து தெர்மாக்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை உயர்வுடன் நிறவடைந்தன.
800 மெகாவாட் திறன் கொண்ட 'அல்ட்ரா-சூப்பர் கிரிட்டிகல்' அனல் மின் நிலையத்திற்கான ரூ.1,600 கோடி மதிப்பிலான ஆர்டரை, தெர்மாக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் வென்றதைத் தொடர்ந்து, நேற்றைய (மார்ச் 30) தொடக்க வர்த்தகத்தில் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்தது முடிவடைந்தன.
நேற்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் தெர்மாக்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.3,211.50-ஆக வர்த்தகமானது. இது அதன் முந்தைய நாள் முடிவின் விலையிலிருந்து இது 0.60% அதிகமாகும்.
இதற்கிடையில், முந்தைய வர்த்தக அமர்வில், நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.3,192.35ஆக நிறைவடைந்தது. இது 1.61% சரிவாகும்.
தெர்மாக்ஸ் பங்கு விலை, ஜூலை 17, 2025 அன்று ரூ.4,088.00 என்ற 52 வார உச்சத்தையும், டிசம்பர் 08, 2025 அன்று ரூ.2,744.20 என்ற 52 வார குறைந்தபட்ச நிலையை எட்டியது.
தற்போதைய நிலையில், தெர்மாக்ஸ் பங்கின் விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 21.91 சதவீதம் குறைவாகவும், 52 வார குறைந்தபட்ச விலையிலிருந்து 16.33 சதவீதம் அதிகமாகவும் வர்த்தகமாகி வருகிறது. அதே வேளையில், நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 38,038.86 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில், தெர்மாக்ஸ் பங்கின் விலை 15 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Thermax share price gained in the opening trade on March 30 following the company arm won an order worth RS 1,600 crore for 800 MW ultra-supercritical thermal power plant.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.6.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் அணுமின் திட்டங்கள்- மகாராஷ்டிர அரசு ஒப்பந்தம்

ஜேபிவிஎல் 4வது காலாண்டு இழப்பு ரூ. 13.37 கோடி!

சூரிய மின் திட்டங்களில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யும் கெயில்!

தெலங்கானாவில் அனல் மின் திட்டம்: என்டிபிசி - பெல் ரூ.13,500 கோடி ஒப்பந்தம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




