புதுதில்லி: சூரிய ஆற்றலை நோக்கிய தனது முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மொத்தம் 700 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யவுள்ளதாக, பொதுத்துறை எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், உத்தர பிரதேசத்தின் 'பாடா' பகுதியில் அமைந்துள்ள தனது பெட்ரோ கெமிக்கல் ஆலையில், நிறுவனத்தின் சொந்த மின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, ஜான்சியில் உள்ள டஸ்கோ சூரிய மின் பூங்காவில் 600 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் திட்டத்தையும், அதனுடன் இணைந்து 550 மெகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பையும் உருவாக்கவுள்ளதாக கெயில் தெரிவித்தது.
இதற்கிடையில், மகாராஷ்டிரத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில், 100 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் திட்டத்தையும், அதனுடன் 22 மெகாவாட் திறன் கொண்ட சேமிப்பு அமைப்பையும் அமைக்க உள்ளது.
திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது, நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் தற்போதுள்ள 147 மெகாவாட்டிலிருந்து கணிசமாக உயர்ந்து 1,000 மெகாவாட்டைத் கடக்கும் என்றார் கெயில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தீபக் குப்தா.
Summary
GAIL (India) Limited said it will invest Rs 3,800 crore in setting up 700 MW of solar power capacity across Uttar Pradesh & Maharashtra.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உப்பூா் மின் திட்டம் உடன்குடிக்கு மாற்றம்: விவரங்களை புதிய அரசிடம் சமா்ப்பிக்க மின்வாரியம் முடிவு

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் ஆபரேட்டா் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

100 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம்: கெயில்-சுஸ்லான் நிறுவனங்கள் ஒப்பந்தம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை


