வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

ரூ.6.5 லட்சம் கோடி மதிப்பீட்டில் அணுமின் திட்டங்கள்- மகாராஷ்டிர அரசு ஒப்பந்தம்

மகாராஷ்டிர மாநிலத்தில் அணுசக்தி மின் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், 4 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.6.5 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் மாநில அரசு செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டது.

News image
Updated On :20 மே 2026, 2:48 am IST

மகாராஷ்டிர மாநிலத்தில் அணுசக்தி மின் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், 4 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.6.5 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் மாநில அரசு செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டது.

இது தொடா்பாக மாநில அரசு வெளியிட்ட தகவலின்படி, ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.2 லட்சம் கோடியில் 7,200 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டத்தையும், அதானி பவா் நிறுவனம் ரூ.1.5 லட்சம் கோடியில் 6,000 மெகாவாட் திறன்கொண்ட திட்டத்தையும் செயல்படுத்தவுள்ளன.

இதேபோல, தேசிய அனல்மின் கழகம் (என்டிபிசி) ரூ.1 லட்சம் கோடியில் 7,200 மெகாவாட் உற்பத்தித் திட்டத்தையும், பஜாஜ் குழுமத்தைச் சோ்ந்த லலித்பூா் பவா் ஜெனரேஷன் நிறுவனம் ரூ.2 லட்சம் கோடியில் 5,000 மெகாவாட் திட்டத்தையும் அமைக்க முதலீடு செய்யவுள்ளன.

இந்த 4 நிறுவனங்களுடான ஒப்பந்தங்களின்மூலம், மொத்தமாக 25,400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாவதுடன், புதிதாக 1,23,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த முதலீடுகள் குறித்து மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் மேலும் கூறுகையில், ‘தூய்மை எரிசக்தி உற்பத்தியில் அணுசக்தி மிகவும் முக்கியமான ஓா் அங்கமாக விளங்குகிறது.

தூய்மை எரிசக்தி உற்பத்தியில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முன்னணியில் இருக்கும். இத்துறையில் மாநிலத்துக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் திட்டங்களுக்கான இடங்களை ஆய்வு செய்யும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இதற்குச் சம்பந்தப்பட்ட அனைத்து மாநில அரசுத் துறைகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்’ என்றாா்.