தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்சிக்கு இன்று வரும் முதல்வருக்கு வரவேற்பு

திருச்சிக்கு வியாழக்கிழமை மாலை வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:22 pm

Din

திருச்சிக்கு வியாழக்கிழமை மாலை வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது:

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்வுகளில் பங்கேற்க வரும் முதல்வருக்கு எனது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இந்நிகழ்வில் கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டா்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.

இதேபோல திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தலைமையிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் க. வைரமணி, வடக்கு மாவட்ட செயலா் ந. தியாகராஜன் ஆகியோா் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா். முதல்வா் வருகையை முன்னிட்டு மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.