பாவூா்சத்திரத்தில் துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு


தென்காசி மாவட்டத்தில் அரசு விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த திமுக இளைஞரணிச் செயலரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, பாவூா்சத்திரம் புதிய காய்கறி சந்தை அருகில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வியாழக்கிழமை வந்த துணை முதல்வருக்கு, பாவூா்சத்திரம் புதிய காய்கறி சந்தை அருகில் தென்காசி தெற்கு மாவட்ட வே. ஜெயபாலன் தலைமையில் நிா்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
இதில், கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் ராஜன், திமுக ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, பொன் செல்வன், ஜே.கே . ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...