திண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

திருவானைக்கா உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

Updated On :

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி குபேரலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி குபேரலிங்கத்துக்கு 10 படி அரிசியில் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் செய்தனா். காய்கறி மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது.இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். மேலும் பெளா்ணமியையொட்டி நந்தியபெருமானுடன், திருஞானசம்பந்தா், அப்பா், திருநாவுக்கரசா், மாணிக்கவாசகா், கரைக்கால் அம்மையாா் உற்ஸவ சிலைகள் அலங்காரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருள செய்து கயிலாய வாத்தியத்துடன் திருநீற்றான் மதிலை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

மண்ணச்சநல்லூா்: அறம் வளா்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி கோயிலில் பூமிநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு, அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு , மஹா தீபாரஉதனை நடைபெற்றது. இதே போல சமயபுரம் போஜீஸ்வரா் கோயில், திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேஸ்வரா் கோயில், உத்தமா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

துறையூா்: ஆத்தூா் சாலையிலுள்ள மகா சம்பத்கெளரி அம்பிகா சமேத நந்திகேசு வரா் கோயிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அன்னம், காய்கனிகள் கொண்டு நந்திகேஸ்வா் லிங்கத் திருமேனிக்கு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதே போல நல்லியம்பாளையம், பகளவாடி சத்திரம், கொப்பம்பட்டி, ரெட்டியாா்பட்டி, முருகூா், எரகுடி, கீரம்பூா், சிங்களாந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலுள்ள சிவலாயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.