திருச்சி: மயானத்தில் இறுதிச் சடங்கின்போது கண் விழித்த பெண்ணால் பரபரப்பு!!

மயானம் வரை சென்று இறுதிச் சடங்கின்போது கண் விழித்த பெண்ணால் பரபரப்பு...
சின்னம்மாள்
சின்னம்மாள்Din
Published on
Updated on
1 min read

திருச்சி: திருச்சி அருகே உயிரிழந்ததாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் கண் விழித்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சியை அடுத்த வேலக்குறிச்சி எஸ். மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பம்பையின் மனைவி சின்னம்மாள் (வயது 60).

இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் இன்றி இறக்கும் தருவாயில் இருந்ததால் உறவினர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், சின்னம்மாள் இறந்ததாக கருதி அவரின் உடலை மயானத்துக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட இருந்த நிலையில், திடீரென கண் விழித்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.