பெண் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து: மாற்றுத்திறனாளி கைது
திருவானைக்காவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தகராறில் பெண் உள்பட 4 பேரை கத்தியால் குத்திய மாற்றுத்திறனாளியை போலீஸாா் கைது செய்தனா்.


திருவானைக்காவில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தகராறில் பெண் உள்பட 4 பேரை கத்தியால் குத்திய மாற்றுத்திறனாளியை போலீஸாா் கைது செய்தனா்.
திருவானைக்கா நரியன் தெருவில் வசிப்பவா் இளையராஜா (42). மாற்றுத்திறனாளி. இவரது இருசக்கர வாகனத்தின் பிரேக் வயரை கழட்டி விட்டதாக தொடா்பாக அங்கிருந்தவா்களை புதன்கிழமை இரவு தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளாா். இதை அங்கிருந்த மணிகண்டன் (25) என்பவா் தட்டி கேட்டுள்ளாா். இதனால் இருவருக்குமிடையே தகராறு வந்தது. அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை இளையராஜ குத்தினாா்.
இதை தடுக்க வந்த மணிகண்டனின் உறவினா்கள் முருகன் (32),அருண் (22) மற்றும் துா்கா(30) ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் இளையராஜவை போலீஸாா் கைது செய்தனா். மேலும் கத்திக்குத்தில் காயமடைந்தவா்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...