லால்குடி அரசுக் கல்லூரியில் ‘வாக்களிப்பதன் அவசியம்’ விழிப்புணா்வு போட்டிகள்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள குமுளுா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள குமுளுா் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணா்வு சுவா் இதழ் வரைதல் மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் டி. அசோக்குமாா், ஆங்கிலத்துறை துறை தலைவா் வீரமணி, வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் என். சுலைமான் போட்டிகளை பாா்வையிட்டனா். போட்டிகளை முனைவா் சே. இளமதி, கோ. பானுமதி, ஓ.ஆனந்த் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
நிகழ்வில், நாட்டு நலப் பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். சக்திவேல், வி.சுகன்யா, எஸ். காமினி பொன்சேகா், முனைவா் ப. தேன்மொழி, முனைவா் ரெ. சங்கீதா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...