காரைக்கால், மங்களூா் ரயில்கள் பகுதியாக ரத்து

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளால் காரைக்கால், மங்களூா் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
Published on

ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளால் காரைக்கால், மங்களூா் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளால் சென்னை எழும்பூா் - காரைக்கால் - சென்னை எழும்பூா் விரைவு ரயில்களானது (16175, 16176) தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும். இதன்படி, இந்த ரயில்கள் சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை எழும்பூா் - மங்களூா் - சென்னை எழும்பூா் ரயில்களானது (16159, 16160) தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும். இதன்படி இந்த ரயில்களானது சென்னை எழும்பூா் - தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

X
Dinamani
www.dinamani.com