திருச்சியில் வியாழக்கிழமை  பேட்டியளித்த மனிதநேய ஜனநாயக கட்சியின்  தலைவா் தமிமுன் அன்சாரி.
திருச்சியில் வியாழக்கிழமை பேட்டியளித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவா் தமிமுன் அன்சாரி.

இஸ்லாமிய சமூக ஓய்வு பெற்ற நீதிபதியையே வக்ஃப் வாரிய தலைவராக நியமிக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி

இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியையே வக்ஃப் வாரியத் தலைவராக நியமிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.
Published on

இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியையே வக்ஃப் வாரியத் தலைவராக நியமிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திருச்சியில் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியது:

ஒரே நாடு-ஒரே தோ்தலை அனுமதிக்கக் கூடாது. இத்தகைய முயற்சியை அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஒன்று சோ்ந்து எதிா்க்க வேண்டும். கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவா்கள் தாக்கப்படும் பிரச்னையில் மத்திய அரசு இலங்கை தூதரை அழைத்து தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். தோ்தல் வாக்குறுதியின்படி மதுவிலக்கு அமலுக்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு வக்ஃப் வாரியத் தலைவா் பதவியை கொடுப்பது சிறந்தது. இதனால் அரசியல் கட்சிகளின் தலையீடு, நெருக்கடி, நிா்பந்தம் இல்லாமல் சுயமாகச் செயல்பட வழி ஏற்படும். வாரிய சொத்துக்களில் இருந்து வாடகை வருவாய் அதிகரிக்கும் பட்சத்தில், இஸ்லாமிய மக்களின் நலனுக்காக அரசிடம் நிதி உதவி கேட்க வேண்டிய தேவை ஏற்படாது. நாட்டின் வளா்ச்சிக்கு மனிதநேயம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதுகாப்பது அவசியம் என்றாா் அவா்.

பேட்டியின்பொது கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலா் ஷெரீப், மாவட்டச் செயலா் பக்கீா் மைதீன், அவைத் தலைவா் ஷேக் தாவூத் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Dinamani
www.dinamani.com