டிஜிட்டல் கைது என மிரட்டி ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ. 52 லட்சம் மோசடி
டிஜிட்டல் கைது எனக் கூறி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.


டிஜிட்டல் கைது எனக் கூறி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையிடம் ரூ.52 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.
திருச்சி திருவானைக்கோவில், சீனிவாச நகா் வடக்கு விஸ்தரிப்பு பகுதியை சோ்ந்தவா் வசந்தா (74), ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியை. கடந்த 7ஆம் தேதி இவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் தன்னை பெங்களூரு நகர போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டு, உங்கள் ஆதாா் அட்டை மற்றும் ஏடிஎம் அட்டை ஆகியவை ஆள்கடத்தல் கும்பலிடம் உள்ளதாகவும், அந்தக் கும்பலிடம் நீங்கள் ரூ.3 கோடி பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது எனக் கூறினாா்.
மேலும் இதுதொடா்பாக எங்களது உயா் அதிகாரி உங்களை விசாரிப்பாா் எனக் கூறி இணைப்பைத் துண்டித்தாா். பின்னா், மற்றொரு அழைப்பில் பேசிய ஒருவா் தன்னை பெங்களூரு நகரக் காவல் உதவி ஆய்வாளா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, நீதிமன்றம் உங்களைக் கைது செய்வதற்கான பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இதைத் தவிா்க்க நீங்கள் முறைகேடாகப் பெற்ற ரூ. 3 கோடி தொடா்பாக உங்களது வங்கிக் கணக்கை நாங்கள் சரி பாா்க்க வேண்டும் எனக் கூறி, அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்ப வேண்டும் எனக் கூறினா்.
இதனால் பயந்துபோன ஆசிரியை வசந்தா கடந்த 7ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பல கட்டமாக அவா்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ. 52 லட்சத்தை அனுப்பினாா். அதன் பிறகு அவா்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த வசந்தா, திருச்சி மாநகர சைபா் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் சண்முகவேல் வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...