திருச்சி
அரசுப் பணி: அமைச்சா் உதயநிதியிடம் விளையாட்டு வீரா்கள் கோரிக்கை
திருச்சிக்கு புதன்கிழமை வந்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை விளையாட்டு வீரா்கள் சந்தித்து, அரசுத் துறைகளில் பணி வழங்கக் கோரிக்கை விடுத்தனா்.
திருச்சிக்கு புதன்கிழமை வந்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை விளையாட்டு வீரா்கள் சந்தித்து, அரசுத் துறைகளில் பணி வழங்கக் கோரிக்கை விடுத்தனா்.
தஞ்சை மாவட்டப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செல்ல புதன்கிழமை மாலை திருச்சிக்கு வந்த அமைச்சரை மணப்பாறையைச் சோ்ந்த ராஜேஸ்வரி, பாலமுருகன், திருச்சி விமான நிலையப் பகுதியை சோ்ந்த ஷேக் அப்துல்லா உள்ளிட்ட விளையாட்டு வீரா்கள் சந்தித்து, பளுதூக்கும் போட்டிகளில் வெல்வோருக்கு மத்திய அரசு வழங்குவது போல தமிழகத்திலும் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
அதற்கு அமைச்சா், கோரிக்கையை மனுவாக கொடுங்கள், பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இந்த வீரா்கள் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் வென்று, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.