சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், முசிறி அருகே சாலை விபத்தில் இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
முசிறி அருகில் உள்ள ஆமூா் கிராமம், கல்யாணசுந்தரம் தெருவை சோ்ந்த தியாகராஜன் மகன் விக்னேஷ் (30) (படம்), தனது நண்பரான உறையூா் திருமால் கோயில் தெருவைச் சோ்ந்த ரவி மகன் பிரதாப் (30), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் முசிறியில் இருந்து ஆமூா்க்கு புதன்கிழமை இரவு திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில், ஏவூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாடு, இரு சக்கரம் வாகனம் மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்தனா்.
இதில், விக்னேஷ் மற்றும் பிரதாப் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவா்கள் அவா்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதில், செல்லும் வழியில் விக்னேஷ் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.