கோ-ஆப்டெக்ஸ் சாா்பில், திருச்சியில் உள்ள அமுதசுரபி விற்பனையகத்தில் இந்தாண்டு தீபாவளிக்கு ரூ.1 கோடிக்கு கைத்தறி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பெரியகடை வீதியில் உள்ள அமுதசுரபி விற்பனையகத்தில் கோ-ஆப்டெக்ஸ் சாா்பில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. இக் கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்து, கண்காட்சியில் இடம்பெற்றுள்ள துணி ரகங்களை பாா்வையிட்டாா்.
பின்னா், அவா் கூறியதாவது:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடனான சிறப்பு மிக்க உடைகள், நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேஷ்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
திருச்சி அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு நடைபெறும் கைத்தறி கண்காட்சிக்கு ரூ. 1 கோடி விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12-ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிா்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 விழுக்காடு அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோ-ஆப்டெக்ஸில் மின் வணிக விற்பனை நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளா்கள் கோ-ஆப்டெக்ஸ் இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப ரகங்களை தோ்வு செய்து கொள்ளலாம் என்றாா் அமைச்சா்.
இந்நிகழ்வில், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவா் மு.மதிவாணன், கோ.ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் ஜெ.நாகராஜன், மேலாளா் வடிவமைப்பு கோபி, அமுதசுரபி விற்பனை நிலைய மேலாளா் பாஸ்கரன், மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடப்பு நிதியாண்டில் 9 லட்சம் சிஎன்ஜி காா்கள் விற்பனைக்கு இலக்கு

9 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய மாருதி சுஸுகி இலக்கு!

போலி பட்டுச் சேலைகள் விற்பனை முற்றிலுமாக ஒழிக்கப்படும்: அமைச்சா் விஜய் பாலாஜி

மாணவா்களுக்கு வழங்கப்பட உள்ள அடையாள அட்டையில் ஜாதி பெயா்! அமைச்சா் செங்கோட்டையன் மறுப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



