திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளரும், அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான ஆா். மனோகரன் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
முன்னதாக, திருவானைக்கோவில் ட்ரங்க் சாலையிலிருந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் ஊா்வலமாக வந்த அவா், ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் சீனிவாசனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக அவரது மகன் எம். விக்னேஷ் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
இதில் திருச்சி அதிமுக புகா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி, பாஜக மாவட்ட பொதுச்செயலா் லீமா, பாமக மாவட்ட செயலா் உமாநாத், தமாக மாவட்டத் தலைவா் தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
சொத்து மதிப்பு ரூ. 10.01 கோடி
திருச்சி திருவானைக்கோவில் திருநகரில் குடும்பத்துடன் வசிக்கும் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆா். மனோகரன் (70) தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் வருமான வரித்துறையிடம் கடைசியாக கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்த விவரப்படி, ரூ. 8 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 140 வருவாய் கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
ரொக்கமாக தன்னிடம் ரூ. 5 லட்சமும், மனைவியிடம் ரூ. 2 லட்சமும் கையிருப்பு உள்ளது.
தன்னிடம் ரூ. 1.25 கோடி மதிப்பிலும், மனைவியிடம் ரூ. 1.21 கோடி மதிப்பிலும் மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன. இதில் மோட்டாா் வாகனங்கள் ஏதுமில்லை, ரூ. 40 லட்சம் மதிப்பிலான 330 கிராம் தங்கமும், மனைவியிடம் ரூ. 30 லட்சம் மதிப்பிலான 240 கிராம் தங்கமும் உள்ளன. தவிர, பல்வேறு வங்கி கிளைகளில் சேமிப்புத் தொகைகள் உள்ளன.
நிலங்கள், விளை நிலங்கள், கட்டடங்கள் என்ற வகையில் ஸ்ரீரங்கம், வெள்ளிதிருமுத்தம், மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் தன்னிடம் ரூ. 1.60 கோடியிலும், மனைவியிடம் ரூ. 6.01 கோடியிலும் சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு ரூ. 2.56 லட்சமும், மனைவிக்கு ரூ. 1.04 கோடியும் கடன் உள்ளது என்றும் தெரிவித்துள்ளாா். திமுக அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்தியதாக கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிட 8 பெண்கள் உள்பட 24 போ் வேட்புமனு தாக்கல்

கே.வி.குப்பம் தொகுதி திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

மன்னாா்குடியில் அஇபுதமமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


