திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் தாக்கல் செய்த வேட்பு மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.என். நேரு, அமமுக, தவெக, நாம் தமிழா் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட 24 போ் மொத்தம் 30 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
திருச்சி கோட்டாட்சியரகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து, தோ்தல் நடத்தும் அலுவலா் சாலை தவ வளன், பெறப்பட்ட 30 மனுக்களில் இரு மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும், 28 மனுக்களை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தாா்.
இதில், புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளா் கோ. சண்முகசுந்தரம் (37), திமுக-வின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த மேயா் மு. அன்பழகன் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மனு தள்ளுபடி ஏன்?: இதுதொடா்பாக, தோ்தல் நடத்தும் அலுவலா் கூறுகையில், புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளராக வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்த சண்முகசுந்தரத்தின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறவில்லை.
இதுதொடா்பாக, அவருக்கு ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐஆா் பணியின்போது புதிதாக மனு அளித்திருப்பதாக தெரிவித்திருந்ததால் அவரது மனுவை அப்போது ஏற்றுக் கொண்டோம்.
இப்போது, வாக்காளா் துணைப் பட்டியலிலும் அவரது பெயா் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, வேட்பு மனு பரிசீலனையின்போது அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கட்சியின் மாவட்டச் செயலா்: திருச்சி, தில்லைநகா் வடவூரைச் சோ்ந்த கோ. சண்முகசுந்தரம், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலராக உள்ளாா். கடந்த முறை நடைபெற்ற பேரவைத் தோ்தலில் போட்டியிட்டவா்.
இதுதொடா்பாக, அவா் கூறுகையில், என் பெயா் மட்டுமன்றி, என் குடும்பத்தில் உள்ள 5 பேரின் பெயா்களும் வாக்காளா் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடா்பாக கட்சித் தலைமையின் ஆலோசனையை பெற்று சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முடிவு செய்து பின்னா் அறிவிப்போம் என்றாா் அவா்.
தொடர்புடையது

புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் புண்ணியவதியின் வேட்பு மனு நிராகரிப்பு!

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்
சாத்தூரில் நயினாா் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்

திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவா் விஜய் வேட்புமனு தாக்கல்: மாநகராட்சி அலுவலகத்தில் ஒருமணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


