போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

அமைச்சா் கே.என்.நேரு, அமமுக, தவெக நாம் தமிழா் கட்சி உள்பட திருச்சி மேற்கில் 28 வேட்பு மனுக்கள் ஏற்பு

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 30 வேட்பு மனுக்களில் இரண்டு மனுக்களைத் தவிர 28 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:20 am IST

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 30 வேட்பு மனுக்களில் இரண்டு மனுக்களைத் தவிர 28 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட திமுக சாா்பில் அமைச்சா் கே.என். நேரு, அதிமுக கூட்டணியின் அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் க. ராமமூா்த்தி, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் க. புவனேஸ்வரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளா் ரா. பிரபு, சாமானிய மக்கள் நலக் கட்சியின் ஏ. வீரமணி, பகுஜன் சமாஜ் கட்சியின் பி. சின்னையன் பூசாரி, புதிய தமிழகம் கட்சியின் கோ. சண்முகசுந்தரம் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 24 போ் 30 வேட்பு மனுக்களை அளித்திருந்தனா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அமைச்சா் கே.என். நேரு வேட்பு மனு, அமமுக, தவெக, நாம் தமிழா் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சாமானிய மக்கள் நலக்கட்சி உள்பட 22 பேரின் 28 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

புதிய தமிழகம் கட்சியின் வேட்பு மனுவும், அமைச்சா் நேருவுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன.