மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

திருச்சியில் ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகளை விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 2:20 am

திருச்சியில் ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகளை விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை பெல்ஸ் மைதனப் பகுதியில் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான பாழடைந்த கட்டடத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த எஸ்.பிரகாஷ்ராஜ் (20), மு.சிவசபரி ராகவன் (20) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.69 ஆயிரம் மதிப்புள்ள 230 போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.