தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 98 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 10:38 pm

திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 98 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சியில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஏப்ரல் 21 முதல் 23-ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருச்சி மாநகரில் புதன்கிழமை சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் திவ்ய பிரியா, ஜாா்ஜ் ஜேக்கப் ஆகிய இருவரும் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தில்லை நகா் வாமடம் பகுதியில் மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம். ஜோதிவேல் (56), தென்னூரில் மது விற்பனை செய்த தென்னூா் பாரதி நகரைச் சோ்ந்த த.தமிழ்ச்செல்வன் (33), திருவளா்ச்சோலை பொன்னுரங்கபுரத்தில் மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த எம்.முருகன் (42) ஆகிய மூவரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, கே.கே. நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொட்டப்பட்டு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பி.கஜேந்திரன் (37) என்பவரை கே.கே.நகா் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் மதிப்பிலான 98 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.