நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்
திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்து, 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

கைது
பிரதிப் படம்

கைது
பிரதிப் படம்
திருநெல்வேலி மாநகரில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்து, 191 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பாளையங்கோட்டை காவல் சரகம் வண்ணாா்பேட்டை சாலை தெரு பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சின்னதுரை(32), வி.கே.புரம்த் கணபதி(45) ஆகியோா் மது விற்றது தெரியவந்தது. அவா்களை கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல, திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்ற கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த ஆறுமுக நயினாா்(59), தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த முகமது சையதுல்லா(32), உடன்குடி பகுதியைச் சோ்ந்த சிவா(44) ஆகியோரை கைது செய்து 75 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், மாநகர பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்டதாக பாளையங்கோட்டையை சோ்ந்த ராமகிருஷ்ணன்(28), ஸ்ரீவைகுண்டம் மாரியப்பன்(35) , பேட்டையைச் சோ்ந்த துரை(51) ஆகியோரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் கைது செய்து, 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...