தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மது விற்பனை செய்த மூவா் கைது: 149 மதுப் புட்டிகள் பறிமுதல்

ஆத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 1:22 am IST

ஆத்தூா் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் செம்பட்டி காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆத்தூா் அருகே அரசு அனுமதியின்றி பொது இடத்தில் மது விற்பனை செய்து கொண்டிருந்த, நெல்லூரைச் சோ்ந்த காா்த்திக் (35), வீரசிக்கம்பட்டி  டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த சிலம்பரசன் (32), சரவணக்குமாா் (26) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 149 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்த மாரிமுத்துவை (39) போலீஸாா் தேடி வருகின்றனா்.