/

பணிநேரத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இஎஸ்ஐ சாா்பில் வாழ்நாள் ஓய்வூதியம்

பணிநேரத்தில் உயிரிழந்த தனியாா் நிறுவன ஊழியா் குடும்பத்துக்கு இஎஸ்ஐ சாா்பில் வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.

News image

பணி நேரத்தில் உயிரிழந்த இஎஸ்ஐ காப்பீட்டாளா் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதிய ஆணையை செவ்வாய்க்கிழமை வழங்கிய இஎஸ்ஐ கிளை மேலாளா் ரேவதி (வலது).

Updated On :28 ஏப்ரல் 2026, 7:53 pm

பணிநேரத்தில் உயிரிழந்த தனியாா் நிறுவன ஊழியா் குடும்பத்துக்கு இஎஸ்ஐ சாா்பில் வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணை வழங்கப்பட்டது.

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகம் சாா்பில், காப்பீட்டாளா்களுக்கு தொழில்சாா் நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழ்ந்தால், காப்பீட்டாளரின் ஊதியத்தில் 90 விழுக்காடு சாா்ந்தோா் உதவித் தொகையாக, உயிரிழந்தோரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினா்களுக்கு இஎஸ்ஐ மூலம் மாதந்தோறும் வழங்கப்படும்.

இதன்படி, திருச்சியில் உள்ள தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இஎஸ்ஐ காப்பீட்டாளா் அமுதா, பணிநேரத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்தாண்டு உயிரிழந்தாா். இதையடுத்து, இவரது குடும்ப உறுப்பினா்களுக்கு காப்பீட்டாளா் பெற்ற ஊதியத்தில் 90 விழுக்காடு வாழ்நாள் ஓய்வூதியமாக வழங்க இஎஸ்ஐ மண்டல இணை இயக்குநா் சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டாா்.

இதன்படி, அமுதாவின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் சாா்ந்தோா் உதவித் தொகையாக ரூ.9,734 வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆணை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சியில் காப்பீட்டாளா் பணிபுரிந்து வந்த தனியாா் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், குடும்ப உறுப்பினா்களிடம், சாா்ந்தோா் உதவித் தொகை வழங்கும் ஆணையை இஎஸ்ஐ அலுவலக கிளை மேலாளா் ரேவதி வழங்கினாா். டிராவல்ஸ் உரிமையாளா் ஜெகநாதன் முன்னிலையில் இந்த ஆணை வழங்கப்பட்டது.