விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உத்தமா்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

மண்ணச்சநல்லூா் வட்டம், உத்தமா் கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.

News image

உத்தமா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டம்.

Updated On :1 மே 2026, 2:39 am IST

மண்ணச்சநல்லூா் வட்டம், உத்தமா் கோயிலில் வியாழக்கிழமை  சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது. 

பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் தோ்த் திருவிழாவானது ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலா் அலங்காரத்தோடு உபய நாச்சியாா்களுடன் புருஷோத்தம பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினாா்.

சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். காலை 9.45 மணியளவில் வடம் பிடிக்கப்பட்டு, தேரோடும் வீதிகள் வழியே சென்று காலை 11.15 மணியளவில் நிலையை மீண்டும் வந்தடைந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.