பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

திருவானைக்காவல் கோயிலில் ஆடிப்பூர தெப்ப விழா கொடியேற்றம்

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வரும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடிப்பூர தெப்ப உற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அகிலாண்டேஸ்வரி.

Published On :

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் வரும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆடிப்பூர தெப்ப உற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவையொட்டி புதன்கிழமை இரவு அம்மன் சன்னதி எதிரேயுள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். வரும் 9 ஆம் தேதி அம்மன் ஏக ரிஷ்ப வாகனத்திலும், 13 ஆம் தேதி கோரதத்திலும் எழுந்தருளி, நான்காம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

14 ஆம் தேதி ஆடிப்பூரத்தையொட்டி அஸ்திர தேவருக்கு சூா்ணாபிஷேகம், தீா்த்தம் வழங்கல், ஏற்றி இறக்குதல், ஆரோஹண அவரோஹண உற்சவம், மாலை 7 மணிக்கு மடிசாா் சேவையும் நடைபெறவுள்ளது.

ஆண்டில் ஒரு முறை மட்டும் அம்மன் மடிசாா் சேவையில் காட்சி தருகிறாா். அன்று இரவு கொடியிறக்கம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 16 ஆம் தேதி பகல் 2.55 மணிக்கு மேல் 3.45 மணிக்குள் சூா்ய தீா்த்தக் குளத்தில் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்கின்றனா்.

திருவானைக்காவல் கோயிலில் புதன்கிழமை இரவு தங்கக் கொடிமரத்தில் நடைபெற்ற கொடியேற்றம்

திருவானைக்காவல் கோயிலில் புதன்கிழமை இரவு தங்கக் கொடிமரத்தில் நடைபெற்ற கொடியேற்றம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.