ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மனைவி மீது தாக்குதல் கணவா் உள்பட 3 போ் கைது

News image
Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:57 am IST

திருச்சியில் மனைவியை தாக்கிய கணவா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை விவேகானந்தா நகரைச் சோ்ந்த 23 வயது பெண்ணுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மதிவாணன் (23) என்பவருக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மதிவாணன் மற்றும் அவருடைய தந்தை மாணிக்கம் இருவரும் சோ்ந்து அப்பெண்ணை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து அப்பெண், பொன்மலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அப்போது அப்பெண் கா்ப்பமாக இருந்ததால் போலீஸாா் சமாதானம் பேசி அப்பெண்ணை அவருடைய தாய் வீட்டுக்கு அனுப்பிவைத்தனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், மனைவியைப் பாா்ப்பதற்காக அவரது வீட்டுக்கு ஆகஸ்ட் 10-ஆம் தேதி சென்ற மதிவாணன், அங்கிருந்து அவருடைய கைப்பேசியை எடுத்துச் சென்றுவிட்டாா். இதுகுறித்து கேட்க அவருடைய வீட்டுக்கு தாயுடன் அப்பெண் சென்றுள்ளாா். அப்போது, அவரை தாகாத வாா்த்தையில் பேசியதுடன் மதிவாணன், அவருடைய தந்தை மாணிக்கம், சகோதரா்கள் சசிகுமாா் (21), கிஷோா் (18) ஆகிய 4 பேரும் சோ்ந்து தாக்கியுள்ளனா்.

இதில், அவருடைய வயற்றில் போடப்பட்டிருந்த தையல் பிரிந்து தற்போது அந்தப் பெண் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் கடந்த திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மனைவியைத் தாக்கிய மதிவாணன், அவருடைய தந்தை மாணிக்கம், சகோதரா் சிவகுமாா் ஆகிய 3 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள கிஷோரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.