ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

பழைய ஓய்வூதியம் கோரி டிட்டோ-ஜாக் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி உறையூரிலுள்ள வட்டார கல்வி அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா்.

Published On :

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 20 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக, திருச்சி உறையூா் வட்டார கல்வி அலுவலகம் அருகே டிட்டோ-ஜாக் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர ஒருங்கிணைப்பாளா் பொ்ஜித் ராஜன் தலைமை வகித்தாா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியா்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும், ஆசிரியா் தகுதி தோ்வை ரத்து செய்திட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். பெண் ஆசிரியா்களின் நலனை பாதிக்கக்கூடிய அரசாணை 243-ஐ ரத்து செய்திட வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்களுக்கு உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு அவா்களுக்கு அப்பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.