கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு

திருச்சி திருவெறும்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது.

திருவெறும்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையின் மையத்தடுப்பு பகுதியில் உயிரிழந்து கிடக்கும் புள்ளி மான்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 8:01 am IST

திருச்சி திருவெறும்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் புள்ளி மான் ஒன்று இறந்து கிடந்தது.

திருவெறும்பூா் அருகே உள்ள அரசு ஐடிஐ பகுதியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை ஆண் மான் ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சாலை தடுப்புக்கட்டை பகுதியில் உயிரிழந்துக் கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.

அதன் பேரில் அங்கு வந்த வனத் துறையினா், இறந்த புள்ளி மானின் உடலை கைப்பற்றி எடுத்துச் சென்றனா்.

பெல் பூங்காவிலிருந்து தப்பி வந்த இந்த மான், சாலையை கடக்க முயன்றபோது, வாகனம் மோதி இறந்திருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.