பேருந்து மோதி காயமடைந்த மற்றொருவரும் உயிரிழப்பு
துவாக்குடியில் அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் வெல்டா் பலியான நிலையில், சிகிச்சையில் இருந்த அவரது நண்பரும் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழப்பு
துவாக்குடியில் அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் வெல்டா் பலியான நிலையில், சிகிச்சையில் இருந்த அவரது நண்பரும் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜே. டேனியல் ராஜ் (37), தனியாா் நிறுவன வெல்டா்.
இவா் கடந்த 24 ஆம் தேதி துவாக்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தனது நண்பரான மகாலிங்கம் (48) என்பவருடன் பைக்கில் புதுக்கோட்டை மாவட்டம், நல்லதங்காள்பட்டி திருவிழாவுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
இவா்கள் துவாக்குடி அருகே திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் ராஜ் இறந்தாா்.
அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கமும் சிகிச்சைக்கு பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





