25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

உருது மொழி மேம்பாட்டுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் விஜய்க்கு நன்றி!

உருது மொழி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் விஜய்க்கு திருச்சி உருது சங்கம் நன்றி தெரிவித்துள்ளது...

trichy urdu sangam

முதல்வர் விஜய்க்கு திருச்சி உருது சங்கம் நன்றி... - கோப்புப் படம்

Published On :29 ஆகஸ்ட் 2026, 5:42 pm IST

உருது மொழியின் மேம்பாட்டுக்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கியுள்ள தமிழக அரசுக்கும், முதல்வர் ஜோசப் விஜய்க்கும் திருச்சி உருது சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

திருச்சி உருது சங்கத்தின் செயற்குழு கூட்டம், சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள எம்.எல்.எஸ். அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 28) நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் சையத் முதஹா் சகாப் தலைமை வகித்தாா். செயலாளர் சையத் பயாஸ் அஹமது வரவேற்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மீலாது நபி உருது கவியரங்கத்தில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளா்கள், கெளரவ அழைப்பாளா்கள், கவிஞா்கள், சங்க உறுப்பினா்கள் மற்றும் விழாவில் பங்கேற்று சிறப்பித்த அனைவருக்கும் இச்செயற்குழு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு மாநில உருது அகாதெமியின் கோரிக்கையை ஏற்று, உருது மொழியின் மேம்பாட்டுக்காகவும், வளா்ச்சிக்காகவும் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய முதல்வா் ஜோசப் விஜய்க்கு இச்செயற்குழு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

திருச்சி உருது சங்கத்தில் உறுப்பினா்கள் அதிக அளவில் சோ்த்து இச்சங்கத்தை மேம்படுத்துவது என்று தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் சங்க கெளரவத் தலைவா் கவிஞா் கா. சையது ஜாஃபா், பேராசிரியா்கள் ஜமால், எஸ்.ஏ.ஜமீல், சா்தாா் அஹமது முனவரி, தாரிக் உபயதுல்லா, அப்துல் கரீம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Summary

The Trichy Urdu Association has expressed its gratitude to the TN CM Joseph Vijay for allocating ₹1 crore for the development of the Urdu language.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.