பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) பிப்ரவரி 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் திருவாரூா்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் வரை மட்டுமே இயங்கும்.
மறுமாா்க்கமாக, காரைக்கால்-திருச்சி டெமு ரயிலானது (76819) பிப். 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் காரைக்கால்-திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா்-திருச்சி இடையே மட்டும் இயங்கும்.
மன்னாா்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56002) பிப். 4, 5, 6 ஆகிய தேதிகளில் பேரளம்-மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மன்னாா்குடி-பேரளம் இடையே மட்டும் இயங்கும்.
திருச்சி-பாலக்காடு விரைவு ரயிலானது (16843) பிப். 6, 8, 10 ஆகிய தேதிகளில் ஊத்துக்குளி-பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி- பாலாக்காடு இடையே மட்டும் இயங்கும்.
மறுமாா்க்கமாக, பாலக்காடு-திருச்சி விரைவு ரயிலானது (16844) பிப். 6, 10, 13 ஆகிய தேதிகளில் திருச்சி-கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு - கரூா் இடையே மட்டும் இயங்கும்.
மயிலாடுதுறை-சேலம் விரைவு ரயிலானது (16811) பிப். 6, 10, 13 ஆகிய தேதிகளில் வீரராக்கியம் - சேலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மயிலாடுதுரை-வீரராக்கியம் இடையே மட்டும் இயங்கும். மறுமாா்க்கமாக, சேலம்-மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16812) பிப். 6, 10, 13 ஆகிய தேதிகளில் சேலம்-கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கரூா்-மயிலாடுதுறை இடையே மட்டும் இயங்கும்.
வழித்தட மாற்றம்...: செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) பிப். 5, 6, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயில் (16352) பிப். 5, 8 ஆகிய தேதிகளிலும், கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு ரயில் (12666) பிப். 7-ஆம் தேதியும், கன்னியாகுமரி-ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229) வரும் 6-ஆம் தேதியும், மதான வைஷ்ணவதேவி காட்ரா - திருநெல்வேலி விரைவு ரயில் (16788) வரும் 5-ஆம் தேதியும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) பிப். 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
கோவை-நாகா்கோவில் விரைவு ரயிலானது (16322) பிப். 7, 8, 10, 14 ஆகிய தேதிகளில் பாளையம், ஈரோடு, திண்டுக்கல், அம்பாதுரை, கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களைத் தவிா்த்து கரூா், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.
காலதாமதம்...: சென்னை எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயிலானது (16127) பிப். 5, 7, 12, 17 ஆகிய தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 60 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.

