வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 7:19 pm

பொறியியல் பணிகள் காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) பிப். 25, 26, 27, 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) பிப். 25, 26, 27, 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி வரை மட்டுமே இயங்கும்.

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) பிப். 25, 27-ஆம் தேதிகளில் கும்பகோணம் - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) பிப். 25, 27-ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - கும்பகோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது கும்பகோணம் - செங்கோட்டை வரை மட்டுமே இயங்கும்.

வழித்தட மாற்றம்: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) பிப். 26, 27, 28- ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) பிப். 26-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) பிப். 28-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) பிப். 27-ஆம் தேதியும், திருவனந்தபுரம் - திருச்சி அதிவிரைவு ரயிலானது (22628) பிப். 25-ஆம் தேதியும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) பிப். 27-ஆம் தேதி பீளமேடு, சிங்காநல்லூா், கோவை வடக்கு, கோவை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, போதானூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) பிப். 25, 26, 27-ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயிலானது மேற்கண்ட நாள்களில் எா்ணாகுளம், சோ்தலா, ஆலப்புழா, ஹரிபாத் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, கோட்டயம் வழியாக இயக்கப்படும்.