பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, ஈரோடு ரயில்கள் பகுதி ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை, ஈரோடு ரயில்கள் பகுதியாக ரத்து
ரயில்கள் பகுதி ரத்து
ரயில்கள் பகுதி ரத்துகோப்புப் படம்
Updated on

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை, ஈரோடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - திருவாரூா் இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் 10, 11, 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் காரைக்கால் - திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருவாரூா் - திருச்சி வரை மட்டுமே இயங்கும்.

மன்னாா்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56002) வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் பேரளம் - மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மன்னாா்குடி - பேரளம் இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் 13, 15, 17-ஆம் தேதிகளில் ஊத்துக்குளி - பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - ஊத்துக்குளி வரை மட்டுமே இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 12, 13-ஆம் தேதிகளில் பாலக்காடு - கஞ்சிகோடு இடையிலும், பிப். 14, 15, 16-ஆம் தேதிகளில் பாலக்காடு - வாழையாா் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் 16, 19, 23, 26-ஆம் தேதிகளில் ஈரோடு - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - கரூா் வரை மட்டுமே இயங்கும்.

வழித்தட மாற்றம்...: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 12, 13, 14, 15, 16, 17-ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 12, 15-ஆம் தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 14-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயிலானது (07229) வரும் 13-ஆம் தேதியும் மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 11, 12, 13, 14, 15-ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயிலானது வரும் 11 முதல் 17-ஆம் தேதி வரை எா்ணாகுளம், சோ்தலா, ஆழப்புழா, ஹரிபாத் ரயில் நிலையங்களைத் தவிா்த்து கோட்டயம் வழியாக இயக்கப்படும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com